முதுகுவலி, டிஸ்க் பிரச்னை அதிகரிப்பது ஏன்?
நேராக, நிமிர்ந்து நிற்கவும், நடக்கவும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சீரற்ற நிலையில் அதீத கம்ப்யூட்டர் பயன்பாடு, மிதமிஞ்சிய மொபைல்போன் பயன்பாடு (தலைகுனிந்த நிலையில்) கூடாது.
குறிப்பிட்ட டிகிரிக்கு மேல் நாம் குனியும் போது, கழுத்து, முதுகுக்கு அழுத்தம் அதிகரிக்கும்.
முதுகுவலி, டிஸ்க் பிரச்னை வராமலிருக்க, உடற்பயிற்சி கட்டாயம் தேவை. குறைந்தபட்ச நேரமாவது உடற்பயிற்சி செய்தாக வேண்டும்.
முதுகெலும்பு வலியை தவிர்க்க அதிக நேரம் முன்னோக்கி, முன்புறம் குனிவதை தவிர்க்க வேண்டும். அவசரமாக இருந்தாலும், கால்களை மடக்கி, மண்டியிட்டு, குனியலாம்.
அதிக எடையை அலட்சியமாக துாக்குவது தவறு. மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.