குழந்தைக்கு பேச்சு வரவில்லை என்றால் ஆட்டிசம் குறைபாடாக இருக்கலாமா?
ஆட்டிசம் ஒரு நரம்பியல் தொடர்பான வளர்ச்சி குறைபாடு.
இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள் சமூகத்தில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் திறன், பழகும் திறனில் பின் தங்கி இருப்பார்கள்.
ஆட்டிசம் அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு பேசும் திறன் இருக்காது. சில குழந்தைகள் பேசினால் தெளிவாக புரிந்து கொள்ளும்படி இருக்காது.
கண், மூக்கு, வாய், காது, சருமம் ஆகிய புலன்களின் உணர்வுகளில் மாறுபாடு இருக்கும்.
அந்த புலன் சார்ந்த துாண்டல்களுக்கு அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உணர்ச்சிகளை வெளிகாட்டுவார்கள்.
குழந்தைகளின் பேச்சு தாமதமாவதற்கு காரணம் ஆட்டிசம் மட்டுமே இருக்க இயலாது. சில குழந்தைகளுக்கு இயற்கையாகவே பேச்சுதிறன் வர தாமதம் ஆகலாம்.
சந்தேகம் தொடரும் பட்சத்தில் குழந்தைகள் நல மருத்துவரிடமோ, மனநல மருத்துவரிடமோ ஆலோசனை பெற வேண்டும்.