கோடையின் வரப்பிரசாதம் கொன்றை பூ - தங்கத்திற்கு நிகரானது ஏன் தெரியுமா?

கொன்றை மரம் ஆண்டு முழுவதும் பூக்காது. மே மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை மட்டுமே இந்த பூக்கள் பூக்கும்.

சரக்கொன்றை பூக்களை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி இரண்டு சொட்டுகள் காதில் விட்டு வந்தால் காது நோய்கள் குணமாகும்.

கொன்றை பூவை ஆவியில் வேகவைத்து சாறு பிழிந்து அதனுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கால் லிட்டர் அளவு சாப்பிட்டு வந்தால், வயிற்றுப் பூச்சிகள் அழியும்.

தேமல், சொறி, சிரங்கு உள்ளவர்கள், கொன்றை பூக்களை கார்போக அரிசியுடன் சேர்த்து அரைத்து பூசி வந்தால் குணமாகும்.

கொன்றை மர இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வந்தால் விரைவில் குணமாகும்.

கொன்றை பூக்களை அரைத்துக் காய்ச்சிய பசும்பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் உள் உறுப்புகள் பலம் பெறும். உடல் ஆரோக்கியமாகும்.

கொன்றை பூக்களை அரைத்து 10கிராம் அளவு எடுத்து பசுவெண்ணெயில் குழைத்து சேர்த்து சாப்பிட்டு வந்தால், வெள்ளைப்படுதல், வெட்டை நோய்கள் உள்ளிட்டவை சரியாகும்.