இயற்கை குளிரூட்டி பாதாம் பிசின்… சம்மருக்கு ஏற்றது….
பாதாம் மரத்திலிருந்து பெறப்படுவது பாதாம் பிசின் . இதில் நிறைய வைட்டமின்கள், தாதுச்சத்துகள் உள்ளன. புரதங்கள், சோடியம், பொட்டாசியம், மெக்னீஷியம், கால்சியம் இரும்பு போன்றவையும் நிறைந்துள்ளன.
உடலை உடனே குளிர்விக்கும். சம்மருக்கு மிகவும் ஏற்றது. இயற்கை குளிரூட்டியாக செயல்படுகிறது.
ஒரு டீஸ்பூன் அளவு பாதாம் பிசினை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்தால் மறுநாள் ஜெல்லி போன்று மாறியிருக்கும்.
கர்ப்பப்பை, அடிவயிறு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்களும் அடிக்கடி பாதாம் பிசினை சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பாக வெள்ளைப்படுதல் இருக்கும் போது பாதாம் பிசினை எடுத்துகொண்டால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
சருமத்துக்கு பொலிவு, பளபளப்பை உள்ளிருந்து பாதாம் பிசின் கொடுக்கும். ஆனால் உயிர் சத்துகள் அதிகம் என்பதால் தினமும் 5 கிராமுக்கு மேல் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கலாம்.
ஆண்களுக்கு விந்தணு உற்பத்திக்கு மிகவும் நல்லது. விந்து நீர்த்துப்போகும் பிரச்னைக்கும் உதவும்.
நல்ல கொழுப்பை அதிகரித்து கெட்ட கொழுப்பை குறைக்கும். குறிப்பாக இதய நோய்க்கு வித்திடும் கொழுப்பை கரைக்க உதவும்.
சைனஸ் உள்ளவர்கள் வெந்நீரிலோ, சூடான பாலிலோ கலந்து குடிக்க வேண்டும். மேலும் அவர்கள் வாரம் ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம். நட்ஸ் அலர்ஜி உள்ளவர்களும் மருத்துவரின் அலோசனை பெற்றப் பிறகு எடுப்பது நல்லது.