பற்கள் வெண்மையாக என்ன செய்ய வேண்டும்?

பற்களின் இயற்கையான நிறத்தில் இருந்து மாறி சிலருக்கு மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக இருக்கும். சில நேரம் பற்களில் திட்டு திட்டாக நிறம் மாறியிருக்கும்.

இயற்கை நிறம் மாறுவதற்கான காரணங்களை இரண்டு வகையாக சொல்லலாம். ஒன்று பற்களின் வெளிப்புறத்தில் ஏற்படும் நிற மாற்றம். மற்றொன்று உட்புறத்தில் ஏற்படும் நிறமாற்றம்.

பெரும்பாலான பற்களில் மஞ்சள் தன்மை ஏற்படுவதற்கு காரணம் நாம் அன்றாடம் உட்கொள்ளும் காபி, டீ மற்றும் நிறம் அதிகம் கலந்த உணவுப்பொருட்கள் தான்.

புகைபிடித்தல் மற்றும் புகையிலை பயன்படுத்தும் போதும் பற்களில் பழுப்பு முதல் கருமை நிறம் வரை பற்களின் வெளிப்புறத்தில் மாற்றங்கள் ஏற்படும்.

வெண்மையான பற்கள் அப்படியே இருப்பதற்கு அதனை சரியாக கவனம் கொடுத்து பராமரிக்க வேண்டும்.

ஒருநாளைக்கு இரண்டு முறை துலக்க வேண்டும். பற்களின் நிறத்திற்கு மாற்றம் ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

வெளிப்புறத்து நிற மாற்றத்தை 'பிளீச்சிங்' எனும் சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். ரசாயன கலவையை பற்களின் மேல் தடவி ஊதா கதிர்கள் பாய்ச்சி பற்களை வெண்மையாக்கலாம்.

பல் டாக்டர் கண்காணிப்பில் தான் அவை செய்யப்படும். உட்புறத்தில் இருந்து நிறம் மாறும் போது பற்களின் மேல் 'வெனியர்' அல்லது 'கேப்' போட்டு நிறத்தை சரிசெய்யலாம்.