பிரசவத்திற்கு பின் உண்டாகும் மூல நோய் தாக்கம்... தப்பிப்பது எப்படி?

குறித்த நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது, கார வகை உணவுகளை அதிகம் எடுத்தல், செரிமான பிரச்னை, உடல் சூடு போன்றவற்றால் ஆசனவாயில் ஏற்படும் பாதிப்பு மூல நோயாகிறது.

எனவே, இரவில் மந்தமான உணவை தவிர்க்க வேண்டும்.

உடல் சூட்டை தணிக்க பால் உணவு அவசியம்.

முள்ளங்கி சாறு 30 மி.லி., அளவில் எடுத்து பச்சையாகவோ, கொதிக்க வைத்து ஆற வைத்தும் அவ்வப்போது சாப்பிடலாம்.

மணத்தக்காளி, குப்பைமேனி கீரை வேக வைத்த நீரை அவ்வப்போது குடிக்கலாம்; திரிபலா சூரணம் போன்றவற்றை சாப்பிட பாதிப்பு குறையும்.

அதிக பாதிப்பு ஏற்படும் போது டாக்டரிடம் கலந்தாலோசிப்பது அவசியமானது.