ரத்த சோகையை குணப்படுத்தும் கருடன் சம்பா

கருடன் சம்பா அரிசி ரகமானது நெல் மணிகள் சிவப்பு நிறத்திலும், அரிசி வெள்ளை நிறத்திலும் இருக்கும்.

உடல் எடை அதிகரித்துக் குறைக்க முடியாமல் அவதிப்படுபவர்கள். இந்த அரிசியில் உணவு சமைத்துச் சாப்பிட்டு வந்தால், விரைவில் உடை எடையைக் குறைக்கலாம்.

எலும்புகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

ரத்த சோகை, சத்துக் குறைபாடு உள்ளவர்கள் இந்த அரிசியைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நல்ல பலனை அளிக்கும்.

சிறுநீரக பிரச்னைகள், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்தும் தன்மை இந்த கருடன் சம்பா அரிசிக்கு உள்ளது.