வெண்மையான தேமலை எப்படி சரி செய்வது?

சித்த மருத்துவ நோய் கணிப்பின்படி இது உடலில் உள்ள காற்று (வாதம்) தனது அளவில் அதிகரித்தும், நீர் (கபம்) தன்மை திரிந்தும் இருக்கின்ற போது தோலில் தோன்றும் நோய் நிலை.

நவீன மருத்துவ கண்ணோட்டத்தின் படி இதனை பூஞ்சை காளான் தொற்றால் ஏற்படுகின்ற டீனியா வெர்சிகாலர் என்று கூறுவார்கள்.

இதை குணப்படுத்த வாரம் ஒரு முறை எண்ணெய் குளியல் குளிக்க வேண்டும். தினமும் காலை மாலை என இரு முறை குளிக்க வேண்டும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இரவு அதிக நேரம் கண் விழிப்பதை தவிர்க்க வேண்டும்.

திப்பிலி பொடி ஒன்று அல்லது இரண்டு சிட்டிகை அளவு காலை இரவு உணவுக்குப் பின் தேனில் குழைத்து 30 நாள் சாப்பிடலாம்.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் திப்பிலி குறைவாகவும் தேன் மிகுதியாகவும் பயன்படுத்தவும்.

மேற்பூச்சாக சீமை அகத்தி இலை சாற்றில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு ஒரு சிட்டிகை சோற்றுப்பு கலந்து தேமல் உள்ள இடங்களில் பூசி இரண்டு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.

பூச்சு உடலில் எரிச்சலை ஏற்படுத்தினால் எலுமிச்சை மற்றும் உப்பை தவிர்த்து பயன்படுத்தலாம் .

நாம் உடுத்தும் ஆடைகளை தினமும் துவைத்து பயன்படுத்த வேண்டும்.