மார்பக புற்றுநோயை கண்டுபிடிப்பது எப்படி? இதோ டிப்ஸ்!!

பொதுவாக அனைத்து புற்றுநோய்களையும் துவக்க நிலையில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், அறிகுறி இல்லாமலிருந்தாலும் கூட, மார்பக புற்றுநோயை பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம்.

மார்பகங்களில் வலி, மார்பகத்தில் கட்டி, மார்பக காம்புகளில் கசிவு, மார்பக காம்பு பின் நோக்கி செல்லுதல், அக்குள்களில் வீக்கம் ஆகியன முக்கிய அறிகுறிகளாகும்.

இரண்டு மார்பகங்களும் ஒரே வடிவத்தில் இருக்க வேண்டும். எங்கு கட்டி உள்ளதோ அந்தப் பகுதி பெரிதாக இருக்கும்.

அதேபோல் நிப்பிள் பகுதிகளும் ஒரே அளவில் தான் இருக்கிறதா என்பதை கண்டறிய வேண்டும். மார்பகத்தை சுற்றியிருக்கும் சருமமும் சீராக இருக்கிறதா எனப் பார்க்கவும்.

90 சதவீத கட்டிகள், புற்றுநோய் இல்லாத கட்டிகளாகவே இருக்கும். 10 சதவீத கட்டிகள் மட்டுமே புற்றுநோயாக இருக்கும்.

பெண்கள் தங்களது சுய பரிசோதனை மூலம் கண்டுபிடிக்க முடியாத, ஆரம்ப நிலை கட்டிகளை கூட, மேமோகிராம் பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம்.

குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியத்துடன் இருக்கும் பெண்களும் இப்பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

மார்பக புற்று நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து, சிகிச்சை அளித்தால், பாதிக்கப்பட்ட பெண் அதிலிருந்து குணமாக முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். .