ஹேப்பியாக உடல் எடையை குறைக்கும் ஜூம்பா! உடல் எடையை ஆனந்தமாக குறைக்க விரும்பினால் நீங்கள் ஜூம்பாவை தேர்ந்தெடுக்கலாம்.
தனி நபராகவும் செய்யலாம். அதை விட குழுவாக செய்யும் போது கூடுதல் உற்சாகமாக செய்ய முடியும்.
சல்சா நடனம் மற்றும் ஏரோபிக்ஸ் ஆகியவற்றை இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜூம்பா பயிற்சி மேற்கொள்வதால் தலை முதல் பாதம் வரை அனைத்து பகுதிகளுக்கும், அசைவு ஏற்பட்டு உடல் வலிமையாகும்.
ஜூம்பா ஒரு ஏரோபிக் உடற்பயிற்சி போன்றது என்பதால், இது கலோரிகளை விரைவாக எரிக்கவும் கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது.
சுமார் ஒரு மணி நேர ஜூம்பா பயிற்சி மேற்கொண்டால் 600 முதல் 1,000 கலோரிகள் வரை எரிக்க முடியும்
இது வெறும் நடனம் மட்டுமல்ல, இதில் உடற்பயிற்சி நகர்வுகளும்
இணைக்கப்பட்டுள்ளது. அதனாலே உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் அதிக
அளவில் வெளியேறும்.
ஜூம்பா உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் ஏற்றது. வயதிற்கு ஏற்றவாறு, பல வகையான ஜூம்பா பயிற்சிகள் உள்ளன.