டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்துவதால் வரும் ஆபத்து...!

இன்றைய நாகரிக உலகில், ஒருசிலர் டாய்லெட்டுக்கு செல்லும்போது கூட, செல்போன் எடுத்துச்செல்ல தவறுவதில்லை.

ஆனால், டாய்லெட்டில் அலைபேசி பயன்படுத்துவது பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவின் மருத்துவ மையம், மேற்கொண்ட ஆய்வில், மூன்றில் இரண்டு பங்கு பேர் டாய்லெட்டில் அலைபேசி பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.

இவர்கள், அலைபேசி பயன்படுத்தாத மற்றவர்களை விட ஐந்து நிமிடம் கூடுதலாக டாய்லெட்டில் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால், இவர்களுக்கு மற்றவர்களை விட மூலம் உள்ளிட்ட உடல்நல பாதிப்பு ஏற்படுவதற்கு 48 % வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், மூல நோய், வாய்வு தொல்லை, பெருங்குடல் அடிவாய் பகுதியிலுள்ள ரத்த நாளங்களில் வீக்கம், சிறுநீர் கழிப்பதில் பிரச்னை போன்ற பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

இதுதவிர, பாத்ரூமுக்குள் பயன்படுத்தும் செல்போன்களில் 92 % ஈ கோலி, சால்மொனெல்லா போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் படிந்திருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த ஈ கோலி பாக்டீரியா என்பது மலத்திலுள்ள ஒரு கிருமியாகும். உலகளவில் இந்த கிருமியினால் லட்சக்கணக்கானவர்கள் சுகாதார பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.