பிரெஸ்ட் கன்சர்வேஷன் சர்ஜரி என்றால் என்ன?
மார்பக புற்று நோய் குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் தான். முக்கியமாக, கால தாமதம் கூடாது. உடலில் கட்டி வருகிறது என்றால், உடனே என்ன கட்டி என்று பார்க்கும் விழிப்புணர்வு தேவை.
இன்று, மேமோகிராம், சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ., போன்ற நவீன சாதனங்கள் உள்ளன. இதன் உதவியுடன், கேன்சர் கட்டிகளை எளிமையாக அறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
மார்பக அறுவை சிகிச்சையின் போது, மார்பகத்தை அகற்றத் தேவையில்லை. அந்த கட்டியை, 'பிரெஸ்ட் கன்சர்வேஷன்' முறைப்படி, அறுவை சிகிச்சை செய்து, மார்பகத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.
அறுவை சிகிச்சை செய்யும் போது, பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள கட்டியை முழுமையாக அறுவை சிகிச்சை செய்து நீக்கப்படும்.
பின் வயிற்றின் அடிப்பகுதி அல்லது முதுகு பகுதியிலிருந்து சதையை எடுத்து, அந்த இடத்தில் பொருத்தி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விடலாம். இதனால் மார்பகத்தை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது.
சர்ஜரிக்கு பிறகு லேசான ஒரு தழும்பு மட்டுமே இருக்கும். ஒருவேளை மார்பகத்தை இழக்க நேர்ந்தால், முழு மார்பகத்தையும் செயற்கையாக உருவாக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.