பெண்கள் அதிக கால்சியம் இழக்க காரணமும் தீர்வுகளும்!
ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் அதிக கால்சியத்தை இழக்கிறார்கள்; கர்ப்பம், மற்றும் மாதவிடாய் நிறுத்தம் ஆகியவை இதற்கு காரணம்.
இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளுக்கு வாய்ப்பு உள்ளது.
25 - 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை.
50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மருத்துவர் பரிந்துரைத்தபடி 1200 மி.கி. கால்சியம் தேவை.
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு, தினசரி தேவை குறைந்தது 1500 மி.கி. ஆகும்.
கால்சியம் சத்தை அதிகரிக்க பால் மற்றும் தயிர், பாலாடைக்கட்டி ஆகியவற்றை சாப்பிடலாம்.
இவை தவிர கீரை, ப்ரோக்கோலி போன்ற பச்சைக் காய்கறிகளில் கால்சியம் நிரம்பியுள்ளது. வெள்ளை பீன்ஸ் கால்சியம் நிறைந்தது.
ஆரஞ்சுகளில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. வைட்டமின் சி கால்சியத்தை உடல் சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவும்.