வெயில் காலத்தில் வரும் வியர்வை வாடையை போக்க டிப்ஸ்!!

சிறிதளவு தண்ணீரில் புதினா இலைகள் சேர்த்து கொதிக்க வைத்து, மூடி வைக்க வேண்டும். ஆறியதும், அந்தத் தண்ணீரை குளிக்கும் நீருடன் கலந்து உபயோகித்தால், வியர்வை வாடை வீசாது.

காலை நேரத்தில் பெப்பர்மின்ட், வெட்டிவேர், ஜாஸ்மின் போன்றவற்றில் ஒன்றையும்; இரவில் லேவண்டர் ஆயிலையும், ஐந்து துளிகள் கலந்து குளிக்கலாம்.

பகல் நேரத்தில் மனதை உற்சாகமாக வைக்கவும், இரவில் ஆழ்ந்த உறக்கத்துக்கும், இவை உதவும். உடலில் இயற்கையான நறுமணத்தை உணரலாம்.

சுத்தமான சந்தனத்துடன், முல்தானி மிட்டியும், கலப்படமில்லாத ரோஸ் வாட்டரும் கலந்து, வியர்வை அதிகமுள்ள இடங்களில் தடவி, காய்ந்ததும் கழுவலாம்.

குளித்ததும், உடலில் ஈரத்தை நன்கு துடைத்த பின், உடை அணிய வேண்டும். ஏனெனில், ஈரப்பதம் கூட துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம்.

அக்குள் பகுதியில் உள்ள தேவையற்ற ரோமங்களை அகற்றுங்கள். எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அக்குள் பகுதியில் தேய்த்து, அந்த சாறு உலரும்படி விட்டு, பின் குளிக்கலாம்.

கோடை முடியும் வரை இந்த டிப்ஸ்களில் ஒன்றை தினமும் செய்தால், வியர்வை நாற்றம் கட்டுப்படும்.