இன்று எய்ட்ஸ் தடுப்பூசி தினம்!
உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் ஆண்டுதோறும் மே 18 அன்று கடைப்பிடிக்கபடுகிறது.
மே 18, 1997ல் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் மேரிலாந்தில் உள்ள மோர்கன் மாநில பல்கலையில் எய்ட்ஸ் தடுப்பூசி குறித்து உரை நிகழ்த்தினார்.
ஒரு வருடம் கழித்து 1998ல் இருந்து இந்த நாள் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது.
எச்.ஐ.வி., வைரசால் ஏற்படும் எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர்.
இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1998 முதல் மே 18ல் உலக எய்ட்ஸ் தடுப்பூசி விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப் படுகிறது.
தற்போதுவரை இதிலிருந்து முழுமையாக மீள்வதற்கு உதவும் மருந்துகள், சிகிச்சைகள் கண்டுபிடிக்கவில்லை.
அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் பாதிப்புகளுக்கு ஏற்ப, அவற்றை கட்டுப்படுத்த உதவும் வகையிலான சிகிச்சைகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது.