மாத்திரை, உணவு முறையில் கவனம்: நீரிழிவு நோயாளிகள் உஷார்!
இந்தியாவின் நீரிழிவு நிலைமை தற்போது அபாய எச்சரிக்கையாக உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.
நாட்டில் 101 மில்லியன் மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இது மக்கள் தொகையின் 11.4 சதவீதமாகும்.
மேலும், 136 மில்லியன் பேர் முன்நீரிழிவு நிலையில் உள்ளனர். வருங்காலத்தில் நீரிழிவு அபாயம் வேகமாக உயரும்.
வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவு, உடல் பருமன், மன அழுத்தம், மரபணு போன்றவை நீரிழிவு அதிகரிக்க காரணமாக உள்ளன.
இன்றைய நிலையில் ஒவ்வொரு இரண்டு இந்தியர்களில் ஒருவருக்கு அதிக ரத்தச் சர்க்கரை உள்ளது.
நீரிழிவு மிகவும் ஆபத்தான வகையில் இளம் வயதினரிடமும் விரைவாகப் பரவி வருகிறது.
நீரிழிவு கட்டுப்பாட்டில் உணவுமுறையே முதன்மையான ஆயுதம்.
மருந்து, மாத்திரை அல்லது இன்சுலின் தவிர்த்தால், இதய நோய், சிறுநீரக செயலிழப்பு ஏற்படக்கூடும்.
மேலும் கண் கோளாறு, நரம்பு பாதிப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்னைகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.