புரதம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுவதால் பிரச்னையா?
நமது உடல்எடைக்கேற்ப ஒவ்வொரு கிராம் அளவு புரதம் கூடுதலாக சேர்க்க வேண்டும். 60 கிலோ எடையுள்ள நபர் 60 கிராம் புரதம் சார்ந்த உணவை சாப்பிட வேண்டும்.
மாமிசங்களில் தான் அதிகப் புரதம் உள்ளது. மேற்கத்திய நாடுகளில் மூன்று நேரமும் அசைவம் உட்கொள்ளும் பழக்கம் இருக்கிறது.
அந்த அதிகப்படியான புரதம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும் போது சிறுநீரகத்தையும் பாதிக்கும்.
ஆனால் இந்தியாவில் நமது உடல் எடையை விட குறைந்தளவில் தான் புரதம் சாப்பிடுவதால் இங்கு அந்த பிரச்னை குறைவு என டாக்டர்கள் கூறுகின்றனர்.
ஒருவர், வாரத்தில் இரண்டு மூன்று முறை டயாலிசிஸ் செய்கிறார் என்றால் அவருக்கு அதிகமாகப் புரதம் தேவைப்படும்.
ஏனென்றால் டயாலிசிஸ் செய்யும் போது யூரியா, கிரியாட்டினின் போன்ற கழிவுகளுடன் அத்தியாவசிய சத்துகளான அமினோஅமிலம் (புரதங்கள்), கால்சியம் போன்றவையும் வெளியேறும்.
எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தேவைக்கு அதிகமான அளவை சிறுநீரகங்கள் வெளியேற்றிவிடும்.
எந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சிறுநீரக டாக்டர் அறிவுறுத்தியுள்ளாரோ அந்தளவு மட்டுமே குடிக்க வேண்டும்.