மருந்தாகும் செர்ரி பழ ஜூஸ்

ஆண்டுதோறும் ஒவ்வொரு விதமான உணவு கவனம் பெறுகிறது. குறிப்பாக இயற்கையான காய்கறி, பழங்களிலுள்ள மருத்துவ குணங்கள் கண்டறியப்படுகின்றன.

இந்தாண்டு 'டார்ட் செர்ரி' எனும் பழம் ஆய்வாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. பேக்கரி பொருட்களில் மட்டுமே பயன்பட்டு வந்த இப்பழம் தற்போது மருந்தாக பயன்படுகிறது.

முதன்முதலாக 2011ல் செர்ரியின் மருத்துவ குணங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2023ல் இது துாக்கமின்மையை சரி செய்வதாக கண்டறியப்பட்டது.

இந்த பழத்தில் மெலடோனின் என்ற ஒரு ஹார்மோன் உள்ளது. இது நல்ல துாக்கத்திற்கு அவசியமானது.

இதிலுள்ள ட்ரைப்டோஃபான் எனும் ஒருவித அமினோ அமிலம் நம்முடைய உடலுக்கு மிகவும் நல்லது. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

இது குறித்து ஆய்வு செய்த இங்கிலாந்து விஞ்ஞானிகள் இந்த பழத்தின் சாற்றை மருந்துக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியாது.

அதே நேரத்தில் மருந்துடன் சேர்த்து எடுத்து கொண்டால் விரைவில் குணமடையலாம் என்கின்றனர்.

இந்த பழச்சாற்றை எந்த வடிவில், எவ்வளவு உட்கொண்டால் முழுப் பயனை பெற முடியும் என தொடர்ந்து ஆய்வுகள் நடக்கின்றன.