சிறார்களை தாக்கும் தொண்டை அடைப்பான் (டிப்தீரியா) நோய் பாதிப்பு அறிவோமா!!

தொண்டை அடைப்பான் 'டிப்தீரியா' நோய் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்களை அதிகமாக தாக்கும்.

நோய் சக்தி குறையும் போது, பாக்டீரியா தொற்று வாயிலாக பரவும். குறிப்பாக 'காரிணி பாக்டீரியம் டிப்தீரியே' என்ற வகை பாக்டீரியாக்களால் பரவுகிறது.

சளி, காய்ச்சல், தொடர் இருமல், தொண்டை வலி, கழுத்துப்பகுதி வீக்கம், நெறி கட்டுதல் ஆகியவை இந்நோயின் அறிகுறி.

சிலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். பாக்டீரியா தொற்று ஏற்பட்டதும் தொண்டை சவ்வு வளர துவங்கும்.

அதன் பின் சுவாசத்தையும் உணவை விழுங்குவதை தடுக்கும் வகையில் தொண்டையை அடைக்கும்.

பாதிக்கப்பட்ட நோயாளி இருமும்போதும் காறியுமிழும்போதும் மூக்கைச் சிந்தும்போதும் பாக்டீரியா காற்றில் கலந்து, அடுத்தவர்களுக்குப் பரவுகிறது

குழந்தை பிறந்த ஒன்றரை மாதம், இரண்டரை மாதம், மூன்றரை மாதத்தில் ஐந்து நோய் தடுப்பூசி (தொண்டை அடைப்பான், ரண ஜென்னி, கக்குவான் இருமல், நிமோனியா, மஞ்சள் காமாலை) போட அறிவுறுத்தப்படுகிறது.

தொண்டை அடைப்பான் நோய்க்கு தேவையான பென் சிலின், எரித்ரோமைசின், ஆன்டி டிப்தீரியா சீரம் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.