வெயில் காலத்தில் பரவும் அம்மை நோய்!
கடும் வெயிலின் வெப்பத்தாக்கம் அதிகரிக்கும்போது, உடலின் வெப்ப நிலையும் மாறுகிறது. தட்டம்மை, சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி ஆகிய நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
காய்ச்சல், வியர்வை, சோர்வு, நடுக்கம், தலைவலி, தசைப்பிடிப்பு, பசியின்மை, நீர்ச்சத்து குறைபாடு போன்ற உபாதைகள் ஏற்படலாம்.
அம்மை நோய் ஒரு வகை வைரசால் பரவும் நோய். இது எளிதில் பரவும். இந்நோய் பொதுவாக சிறுவர்களை தாக்கும்.
இந்நோயால் பாதிக்கப்பட்டவரின் உமிழ் நீர், தும்மல் மற்றும் இருமல் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்நோய் எளதில் பரவுகிறது.
அம்மை வைரஸ் தொற்று இரு வாரங்களில் சரியாகி விடும் என்றாலும், மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும்.
நோய் பரவாமல் தடுக்க, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.
வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, அடிக்கடி நீர் அருந்த வேண்டும்; இளநீர், பழங்கள், பழச்சாறுகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
ஐஸ்கிரீம் போன்ற குளிர்ச்சியான பானங்களை தவிர்க்க வேண்டும்.
வெயிலில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். பருத்தியிலான தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். பாலியஸ்டர், நைலான் ஆடைகளை தவிர்க்க வேண்டும்.