புரதம் ஏன் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிடலாம்?

தினசரி உணவில், கார்போஹைட்ரேட் 50 - 55 சதவீதம், புரதம் 10 - 15 சதவீதம், கொழுப்பு 25 - 30 சதவீதம் இருக்க வேண்டும் என்று நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் நியூட்ரிஷன் அமைப்பு பரிந்துரை செய்கிறது.

தினசரி உணவில் இடம் பெறும் புரதம், நம் திசுக்கள், என்சைம்கள், ஹார்மோன்கள், நோய் எதிர்ப்பு சக்தி என்று அனைத்திற்கும் தேவை.

வழக்கமாக சாப்பிடும் பருப்பு வகைகள், சுண்டல், பால், தயிர், பனீர், கோழி இறைச்சி, மீன் இவற்றில் புரதம் உள்ளது.

குறைந்த விலையில் கிடைக்கும் முட்டையில், உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் போதுமான அளவு இருப்பதால், முழுமையான புரதம் சுலபமாக அனைவருக்கும் கிடைக்கும்.

சைவம் உண்பவர்களுக்கு தானியத்தில் சில அமினோ அமிலம் குறைவாக இருந்தால், பருப்பில் உள்ளவை அதை ஈடு செய்து விடும்.

ஆக அனைவருக்கும் ஆரோக்கியமான உடல் நிலையை பெற நிச்சயமாக நல்ல புரதம் தேவை. சீரான அளவுடன் தாவர அல்லது அசைவ உணவுகளை தினமும் எடுத்துக்கொள்ளலாம்.