நுரையீரல் பைப்ரோசிஸ் பாதிப்பு குறித்து அறிவோமா!!

நுரையீரல் முழுவதிலும் உள்ள அல்வியோலை என்ற சிறிய காற்றுப் பைகள், சுவாசத்தை உள்ளிழுக்கும் போது பிராண வாயுவை ரத்த நாளங்களுக்கு செலுத்தும்.

மூச்சை வெளியில் விடும் போது ரத்த நாளங்களில் உள்ள கார்பன்டை ஆக்சைடு அல்வியோலையின் உள்ளே செல்லும். இது தான் சுவாச மண்டலத்தின் அடிப்படை வேலை.

சுருங்கி, விரியும் தன்மையுள்ள அல்வியோலையைச் சுற்றிலும் ரத்த நாளங்கள் உள்ளன. இந்த இரண்டிற்கும் ஆதாரமாக வலை போன்ற 'பைபர்ஸ்' என்கிற அமைப்பு உள்ளது.

பைபர்கள் எண்ணிக்கையில் அதிகமாகும் போது, பஞ்சு போன்ற நுரையீரல் இறுகி விடும். இதை 'நுரையீரல் பைப்ரோசிஸ்' அல்லது இன்டர்டீஷியல் லங்க் டீசிஸ் என்று சொல்வோம்.

அறுபது வயதிற்கு மேல், காரணம் இல்லாமல் நுரையீரல் பைப்ரோசிஸ் வருவதாக மருத்துவ உலகில் கூறப்படுகிறது. இது, 'இடியோபதிக் பல்மனரி பைப்ரோசிஸ்' எனப்படுகிறது.

ஆனால் ஒருவருக்கு இந்த பாதிப்பு குறித்து உறுதி செய்ய சி.டி., ஸ்கேன் எடுத்தால், என்ன காரணத்தால் அவை வந்தன என்பதை சுலபமாக அறியலாம்.

பைப்ரோசிஸ் பாதிப்பு மேலும் அதிகரிக்காமல் இருக்க, ஆன்டி பைப்ராடிக் மருந்துகள் உள்ளன. அதனால் நலம் பெறுவது எளிது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பறவைகளின் உடலில் வழியும் திரவம் இந்த நோய் பாதிப்பை உண்டாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பாதிப்பு உள்ளவர்கள் பறவைகளை வீட்டில் வளர்ப்பதை தவிர்க்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.