இதயநோய் பாதிப்பை தவிர்க்க உதவும் வேர்க்கடலை
வேர்கடலையில் கார்போஹைட்ரேட், புரோட்டின் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இதிலுள்ள கொழுப்புகளில் 70 சதவீதம் நன்மை விளைவிக்கக்கூடியது என்பதால், உடலில் கொழுப்பு சத்தை அதிகரிக்காது.
இதில் பாதாம் பருப்பை விட 2 மடங்கு அதிகம் சத்துகள் உள்ளன. ஜிம் செல்லும் இளைஞர்கள் வேர்கடலையை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மோனாஷ் பல்கலை வேர்க்கடலையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.
அதில், தினமும் சிறிதளவு வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளை உட்கொண்டால் இதய நோய், ஞாபகமறதி, புற்றுநோய் உடல் பருமன், நீரிழிவு ஆகிய நோய்கள் வராமல் காக்கலாம் என தெரியவந்துள்ளது.
குறைந்தளவு கார்போஹைட்ரேட் உள்ளதால், பிசிஒடி பிரச்னை உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடலாம்.
கர்ப்பிணிகள் தினமும் ஒரு கப் வேக வைத்த வேர்கடலையை எடுத்துக்கொண்டால், குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தேவையான போலிக் அமிலம் கிடைக்கும்.
அதேவேளையில், செரிமான பிரச்னை, சொரியாசிஸ், வாத நோய் உள்ளவர்கள் வேர்கடலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.