இருமலை குணமாக்கும் அன்னாசி பூ : வயிற்று பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வு!

பிரியாணியில் பயன்படுத்தப்படும் நறுமண மிக்க அன்னாசிப்பூ இனிப்பு மற்றும் கார்ப்பு சுவைகளை கொண்டது.

அன்னாசி பூவில் சர்க்கரைச் சத்து, புரதச்சத்து, வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'சி' அகியன நிறைந்துள்ளது.

அன்னாசி பூ எனும் மூலிகைத் தாவரமானது சீனா மற்றும் வியட்நாம் நாடுகளை பூர்வீகமாகக் கொண்டது.

உலக அளவில் இருமல் மருந்து கலவைகளுக்கு அன்னாசி பூ ஒரு பொதுவான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

குடல்வாயு மற்றும் வலிக்கு தீர்வாக அன்னாசிபூ தேநீர் பயன்படுத்தப்படுகிறது. வயிறு உப்பிசம், ஏப்பம் ஆகிய வயிறு தொடர்பான பிரச்னைகளுக்கும் இது நல்ல பலன் தரும்.

அன்னாசி பூவானது புற்றுநோயில் இருந்து பாதுக்காக்கிறது. மேலும் வைரஸ் தொற்றுக்கும் ஒரு நல்ல தடுப்பு மருந்தாக செயல்படுகிறது.

அன்னாசிப் பூவை நீர் விட்டு அரைத்து தினந்தோறும் வயிற்றில் பூசிவந்தால் பெரு வயிறு கரைய செய்யும்.

இது தோல் சார்ந்த அழற்சி, மூட்டு வலி, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி ஆகிய நோய்களுக்காக உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.