ஹெல்த்தியான நகங்களுக்கு தேவையான சில வைட்டமின் சத்துகள் !

பயோட்டின் என்பது பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின். இது உடையக்கூடிய நகங்களை வலுப்படுத்தி அவற்றின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

நகங்களை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வைட்டமின் பி இன்றியமையாதது.

நகங்கள் உட்பட செல்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை இரும்புச்சத்து அளிக்கிறது. இதில் குறைபாடு இருந்தால், நகங்கள் பாதிக்கப்படக்கூடும்.

நகங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு புரதங்கள் முக்கிய ஆதாரமாக உள்ளன. இது நகங்களுக்கு தேவையான வலிமையையும், நெகிழ்ச்சியையும் அளிக்கிறது.

கொலாஜன் உற்பத்திக்கு இன்றியமையாத வைட்டமின் சி, நகங்களின் வலிமைக்கு வழிவகுக்கிறது.

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உங்கள் நகங்களை ஈரப்பதமாக்ஜ வைக்க உதவுவதால், பளபளப்பான தோற்றம் கிடைக்கக்கூடும்.

உங்கள் நகங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஜிங்க் சத்து அவசியமான ஒன்றாகும்.