ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் செம்பருத்தி டீ
இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
செம்பருத்தி டீயை அடிக்கடி உட்கொண்டால், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
செம்பருத்தி டீ ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். ஜீரண சக்தியை அதிகரித்து, மலச்சிக்கல், வயிற்று போக்கு பாதிப்பை தவிர்க்க உதவுகிறது.
பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, டீ துாள், சர்க்கரை,
ஏலக்காய், நசுக்கிய இஞ்சி, பட்டை, செம்பருத்தி இலைகளை போட்டு நன்கு கொதிக்க
வைத்து, வடிகட்டி சூடாக அருந்தலாம்.
சர்க்கரைக்கு பதிலாக, வெல்லம் சேர்க்கலாம். விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.
அதேவேளையில், கர்ப்பிணிகள், குழந்தைக்கு பாலுாட்டும் தாய்மார்கள், டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்.