கெட்ட கொழுப்பைக் கரைக்கும் லவங்கபட்டை பொடி… இன்னும் பல நன்மைகள் உள்ளன!
லவங்கபட்டையில் 'ஆன்ட்டி ஆக்சிடண்ட்' நிறைந்திருக்கிறது. வைட்டமின், 'ஏ, இ, டி' மற்றும் 'கே' போன்றனவும் உள்ளன.
பட்டை உடலில் இருக்கும் மோசமான விளைவுகளை தரும் எல்.டி.எல் என்னும் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது.
லவங்கப் பேஸ்ட் செய்து, முடியில் தேய்த்துக் குளித்தால் முடி அடர்த்தியாகவும், வலுவானதாகவும் வளரும்.
பற்கள், ஈறுகள் வலுவாக இருக்கவும் சுவாசப் புத்துணர்ச்சிக்கும் பட்டை பயன்படுத்தப்படுகிறது. வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது.
லவங்கபட்டையானது மூளை செல்களை சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது. அல்சைமர், பர்கின்சன் என்னும் நோய், மற்றும் நரம்பியல் நோய்களை தடுக்கிறது.
ஆண்கள் பொதுவாக எதிர்கொள்ளும் மலட்டுத்தன்மை பிரச்னைக்கு இது தீர்வாக அமையும். பால் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரில் லவங்க தூள் கலந்து சாப்பிடலாம்.
முகப்பரு இருக்கும் இடங்களில், தேனில் கலந்து லவங்கப் பொடியை தேய்த்தால் அவை சிறிது நாட்களில் மறைந்து விடும்.
நீரிழிவு பிரச்சினை இருந்தால், லவங்கத் தூள் கலந்த பால் அல்லது டீ அருந்துவதன் மூலமாக உங்கள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.