யூரிக் அமிலம் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யலாம்…
யூரிக் அமிலம் என்பது ரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவுப் பொருளாகும். பியூரின்கள் எனப்படும் ரசாயனங்களை உடல் செயலாக்கி உடைக்கும்போது இது உற்பத்தி செய்யப்படுகிறது.
யூரிக் அமிலம் ரத்தத்தில் கரைந்து, சிறுநீரகங்கள் வழியாகச் சென்று, சிறுநீரில் கலந்து, உடலில் இருந்து வெளியேறுகிறது.
பொதுவாக யூரிக் அமிலம் ஒரு டெசிலிட்டருக்கு 3.5 முதல் 7.2 மில்லிகிராம் வரம்பில் இருக்க வேண்டும்.
யூரிக் அமில அளவுகள் உடலில் அதிகரித்தால், கீல்வாதம், மூட்டு வலி மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
நீரிழிவு, சோரியாசிஸ் நோய், ரத்தத்தில் கொலஸ்டிரால், உடற்பருமன், மது அருந்துபவர்கள் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு யூரிக் அமில பாதிப்பு ஏற்படலாம்.
உணவிலும் உடல் எடையை குறைப்பதும், நல்ல ஆரோக்கியமான உணவை எடுத்து கொண்டால் இந்த அமிலம் குறைந்துவிடும்.
அனைத்து இறைச்சி வகைகளை குறைப்பதும் மற்றும் ஆல்கஹால், பீர் உள்ளிட்ட மதுவை மறுப்பதும் யூரிக் அமிலம் உடலில் அதிகரிப்பதை தடுக்கும்.
வெள்ளைச் சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட கேக், ரொட்டி, ஐஸ்கிரீம் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் குளிர் பானங்களை தவிர்க்க வேண்டும்.
சிறுதானியம், பருப்புகள், பிரவுன் ரைஸ் போன்றா முழுதானிய உணவுகள், பழங்கள், காய்கறிகள் நிறைந்த உணவைச் சாப்பிட்டுவது யூரிக் அமிலம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும்.