சர்க்கரையை தவிர்ப்பதால் இத்தனை நன்மைகளா?

எந்தவொரு உணவு கட்டுப்பாடாக இருந்தாலும், சர்க்கரை அளவை குறைப்பது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

முதலில் 30 நாட்கள் சர்க்கரை இல்லாத சவாலை கடைப்பிடியுங்கள். பின்னர் அதனை சீர்ப்படுத்தி தொடர்ச்சியாக மேற்கொள்ளலாம். அதனால்...

எடை குறையும்... சர்க்கரை பயன்பாட்டை நிறுத்துவதால், தினமும் உட்கொள்ளும் உணவு கலோரியின் அளவு கடுமையாக குறையும். உடல் பருமனால் அவதிப்படுவோர், விரைவாக எடையை குறைக்கலாம்.

வாய் சுகாதாரம்... பொதுவாக வாய்வழி சுகாதாரம் பாதிக்கப்படுவதற்கு சர்க்கரை முக்கிய காரணமாக விளங்குகிறது. சர்க்கரை பயன்பாட்டை நிறுத்துவதால், பற்கள் ஆரோக்கியமுடனும், ஈறுகள் வலுவாகவும் மாறும்.

ஆற்றல் அதிகரிக்கும்... உடலில் ஆற்றலின் அளவு அதிகரிப்பதை கண்கூடாக பார்க்கலாம்.

இதய ஆரோக்கியம்... அதிக சர்க்கரை உணவுகளுக்கும், இதய பிரச்னைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

கல்லீரல் ஆரோக்கியம்... அதிக சர்க்கரை உணவுகளை எடுத்து கொள்ளும் போது, மது அல்லாத கொழுப்பு கல்லீரல் பாதிப்புக்கு வாய்ப்பு அதிகமுள்ளது. சர்க்கரையை தவிர்த்தால் கல்லீரல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சரும ஆரோக்கியம்... ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஆரோக்கியமான அளவில் இருக்கும் போது, சரும ஆரோக்கியம் மேம்படும். வயதான தோற்றம் தாமதாகும்.