ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்திரியின் ஆரோக்கிய நன்மைகள்

இந்திய மற்றும் மேற்கத்திய உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் ஒன்று ஜாதிக்காய். பாரம்பரிய மருத்துவத்திலும் இதன் பங்கு இன்றியமையாதது.

இதில், மாங்கனீசு, தாமிரம், வைட்டமின்கள் பி6 மற்றும் சி, மெக்னீசியம் உடபட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

ஜாதிக்காய் மற்றும் அதன் விதையை மூடியிருக்கும் லேயரான ஜாதிபத்திரி இரண்டுமே செரிமானத்தை மேம்படுத்துகிறது.

இது வாயு, வயிற்று பொருமல் மற்றும் வயிற்று வலியை சரி செய்கிறது. அஜீரணத்தையும், உடலில் சேரும் நச்சுக்களையும் அகற்றும்.

செரிமான பாதையில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் அழற்சியைக் குறைக்கிறது. இதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

ஜாதிக்காயிலுள்ள வைட்டமின் சி, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை மேம்படுத்தும். பல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கின்றது.

ரத்தத்தில் கொழுப்பைக் குறைக்கவும், வெள்ளை அணுக்களில் ஏற்படும் ரத்தப் புற்றுநோயைத் தடுக்கவும் இது உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

குழந்தைப்பேறின்மை, ஆண்களின் விந்து எண்ணிக்கை குறைதல், பாலியல் உறவில் விருப்பமின்மை போன்ற பிரச்னைகளுக்கு ஜாதிக்காயும், ஜாதிபத்திரியும் தீர்வு அளிக்கின்றன.

சூடான ஒரு கப் பாலில், 2 சிட்டிகை ஜாதிக்காய் பொடி மற்றும் அரை டீஸ்பூன் தேன் சேர்த்து குடித்து வர, நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைவதுடன், அமைதியான தூக்கத்தை தரும்.