தமிழகத்தில் வாட்டர்பெல் திட்டம்.. மாணவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிப்பதன் அவசியம் அறிவோமா!

பள்ளிகளில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுகின்றனர். வெயிலின் தாக்கம் மற்றும் விளையாட்டு நேரங்களில் உடலில் நீர்ச்சத்து குறைவது போன்ற சாத்தியங்கள் உள்ளன.

அவர்களுக்கு நீர்ச்சத்து இழப்புடன் உடல் சோர்வு, மனச்சோர்வு வரக்கூடும். இதனால் கவனமின்மை அதிகரிக்கும்.

மேலும் நீர்ச்சத்து இழப்பால் சிறுநீர் தொற்று வரும், மலச்சிக்கல் கூட ஏற்படும். பதின்பருவத்தினருக்கு அதிகளவில் முகப்பருக்கள் தோன்றும்.

அதனால் மாணவர்கள் நேரம் தவறாமல் தண்ணீர் குடிப்பதை ஊக்குவிக்க, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 'வாட்டர் பெல்' திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வகுப்பறை நடவடிக்கைகளை பாதிக்காமல், தினமும் மூன்று முறை, காலை 11 மணி, மதியம் 1 மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு என வாட்டர் பெல் அடிக்கப்படும்.

ஒவ்வொரு முறையும் மாணவர்கள் தண்ணீர் குடிக்க, 5 நிமிட இடைவேளையும் வழங்கப்படுகிறது.

குறிப்பாக பள்ளி நேரத்திலேயே மாணவர்கள் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.