பிரசவதிற்கு பின் அதிக முடி உதிர்வா? தீர்வுகள் சில..

பிரசவத்திற்கு பின்பு முடி உதிர்வு 2 முதல் 4 மாதங்களில் ஆரம்பித்து ஒரு வருடம் வரை நீடிக்கும். இந்த முடி உதிர்வு, 90 சதவீத பெண்களுக்கு நிகழும் என கூறப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் கர்ப்பமாக இருக்கும் போதும் அதற்கு பின்னரும் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள் தான்.

இந்த ஹார்மோன் மாற்றத்தால் கர்ப்பத்தின் போது ஆனஜென் (வளர்ச்சி அடையும்) கட்டத்தில் இருக்கும் முடிகள் பிரசவத்திற்கு பின்பு டெலோஜன் (முடி உதிரும்) கட்டத்திற்கு மாறுகிறது.

பெரும்பாலும் ஒரு வருடத்திற்குள் முடி உதிர்தல் குறைந்து முடி வளர்ச்சியும் பழைய நிலைமைக்கு திரும்பும்.

ஒருவேளை அளவு கடந்து முடி உதிர்வு, வழுக்கை ஏற்படும் அளவுக்கு இருந்தால் சிகிச்சை எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.

சத்து குறைபாடு, உடல் , மனச்சோர்வு, துாக்கம் உள்ளிட்டவைகளை சரி செய்தாலே இயல்பு நிலைக்கு திரும்பும்.

வேதிப்பொருட்கள் குறைந்த ஷாம்பு பயன்படுத்த வேண்டும். முடிக்கு ஹீட்டர் போடுவது, முடியை அழுத்தம் கொடுத்து இழுத்துச் சீவுவதை கைவிட வேண்டும்.

சத்தான காய்கறிகள், உலர்ந்த பழங்கள், கீரை வகைகள், புரதச் சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

பிரச்னை அதிகமானால் தோல் மருத்துவரை அணுகி சத்து மாத்திரை, முடி உதிர்வை கட்டுப்படுத்தும் எண்ணெய் குறித்து பரிந்துரை பெற்றுகொள்ளலாம்.