இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம்!

உடலுறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ம் தேதி உலக உறுப்பு தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

உறுப்பு தானம் என்பது ஒரு நபர் உறுப்பு அல்லது திசுக்களை, தாமாக முன்வந்து, மரணத்தில் விளிம்பில் உள்ளோருக்கு தானமாக அளிப்பதாகும்.

பொதுவாக உடலுறுப்பு தானம், உயிருடன் இருக்கும் போது உறுப்புகளை அளிப்பது, இறந்த பின்னர் உடலுறுப்புகளை தானமாக தருவது என இரண்டு வகைப்படுகிறது.

கண்ணின் விழித்திரை, எலும்பு, எலும்பின் மஜ்ஜை, ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.

ஒருவரிடமிருந்து 25வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும்.சில மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டோர் உறுப்பு தானம் செய்ய இயலாது.

சட்டப்படி 18 வயதுக்கு குறைவானவர்கள் உறுப்பு தானம் செய்ய முடியாது. பெற்றோர்கள் சம்மதிக்கும் பட்சத்தில், உறுப்பு தானம் செய்ய அனுமதிக்கப்படுகிறது

மரணத்திற்கு பிறகு உடலுறுப்பு தானம் செய்வதற்கு பதிவு செய்திருந்தால், அறுவை சிகிச்சை வாயிலாக உறுப்புகள் அகற்றப்படும். இது முழு உடலை சிதைத்து விடாது.