தினமும் சீரகத்தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

சீரகத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி, கொழுப்பை கரைக்கிறது.

உடலிலுள்ள நச்சுகளை நீக்கி சுத்தப்படுத்துவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது; புற்றுநோய் தாக்கத்தை குறைக்கிறது.

சீரகத் தண்ணீரை தொடர்ந்து குடிப்பது ஆரோக்கியமான செரிமான அமைப்புக்கு வழி வகுக்கிறது. அஜீரணம், வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற செரிமான பிரச்னைகளைத் தடுக்கிறது.

இன்சுலின் உற்பத்தியை அதிகரிப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

கருஞ்சீரக விதைகள் இரைப்பையை பாதுகாப்பதுடன், அமிலத்தன்மை மற்றும் அதன் அறிகுறிகளான நெஞ்செரிச்சல், வலி, குமட்டல், வீக்கம், மலச்சிக்கல் போன்றவற்றைக் குறைக்கின்றன.

இதில், இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரித்து, ரத்தச்சோகை பாதிப்பை குறைக்கிறது.

ஆக்ஸிஜன் அளவை அதிகரிப்பதுடன், ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து இதயத்தை காக்கிறது.

இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நச்சுக்களை வெளியேற்றுவதால் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்துக்கு வழிவகுக்கிறது. முகப்பரு, சருமத்தொற்றை தவிர்க்க உதவுகிறது.

சீரகத் தண்ணீரை அதிகமாக சேர்க்கும்போது நெஞ்செரிச்சல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதால், டாக்டரின் ஆலோசனைக்கு பின் குடிக்கலாம்.