கோபத்தை அடக்கினால் கல்லீரலுக்கு ஆபத்து

உடலின் மிகப் பெரிய உறுப்பான கல்லீரல் உணவு, நீர், காற்றின் வழியே உடலுக்குள் செல்லும் நச்சுப்பொருட்களை வெளியேற்றி, உடலை சமநிலையில் வைக்கும்.

எனவே, 'டீ டாக்ஸ்சிபிகேஷன்' எனும் நச்சு நீக்கத்துக்கு தனியாக எதுவும் செய்ய தேவையில்லை. அந்தப் பணியை கல்லீரலே செய்துவிடும்.

மூளைக்கு குளுக்கோஸ் தருவது, நுண்ணுாட்டச் சத்துக்களை சேமிப்பது, ரத்த உற்பத்தி, நோய் தொற்றுக்கு எதிராக போராடுவது என 200க்கும் மேற்பட்ட பணிகளை இது செய்கிறது.

சீன மருத்துவ முறைப்படி கோபத்துக்கும், கல்லீரலுக்கும் நேரடி தொடர்புள்ளது. நமக்கு ஏற்படும் கோபத்தை முறையாக, சரியான முறையில் வெளிப்படுத்தி விட வேண்டும்.

கோபத்தை உள்ளேயே அடக்கி வைத்தால், அது உடம்பில் வெப்பத்தை உண்டு பண்ணும். நாளடைவில், இது உடல் உள்ளுறுப்புகளில், குறிப்பாக கல்லீரலில் அழற்சியை ஏற்படுத்தும்.

உணவுப்பழக்கத்தில் மாற்றம் செய்தால், அழற்சியை ஓரளவு தடுக்கலாம்; ஆனால் சரியான விதத்தில் கோபத்தை வெளிப்படுத்துவது கல்லீரல் ஆரோக்கியத்துக்கு உதவும் என்பதே உண்மை.