நெஞ்சு எரிச்சலால் இரவில் துாக்கம் பாதிக்கப்படுகிறதா?

இரவில் நேரம் கழித்து உணவு உட்கொள்வதால் செரிமானம் ஆகாது.

நேரம் தவறி சாப்பிடும் பட்சத்தில் அல்சர் பாதிப்பு உண்டாக வாய்ப்பு அதிகம் உள்ளது. அல்சர் வரும்போது துாக்கமின்மை வர வாய்ப்பு அதிகம்.

இதனால் மசாலா, அஜினோமோட்டோ நிறைந்த உணவு வகைகளான பிரியாணி, சிக்கன் ரைஸ், நுாடுல்ஸ் இது போன்ற துரித உணவுகளை இரவில் தவிர்ப்பது நல்லது.

உடல் உறுப்புகள் சீராக இயங்க குறைந்தபட்சம் 7 முதல் 8 மணி நேரம் துாக்கம் அவசியம்.

அதனால் இரவில் அலைபேசியில் அதிக நேரம் செலவழிப்பதை தவிர்க்க வேண்டும்.

எப்போதும் மன அமைதியுடன் பதட்டம் அடையாமல் வேலை பார்க்க வேண்டும்.

தொடர்ந்து நெஞ்சு எரிச்சல் பிரச்னை இருந்தால் லேசானது தானே என்று அலட்சியமாக இருக்காமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.