ஒருவேளை உணவாக பழங்கள் மட்டும் எடுப்பது சரியா?
ஒருநேரம் பழங்களை மட்டுமே உணவாக எடுக்கும் பழக்கம் நமக்கு தேவை தான் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏனென்றால் அவசரம் அவசரமாக உணவை உண்ணும் பழக்கம் நம்மிடையே அதிகரித்து விட்டது. அதனால் தான் இந்த கேள்வியே எழுகிறது.
நமக்கு வரும் வயிற்று பிரச்னைகளுக்கு உணவை அவசரமாக உண்பதும் ஒரு காரணம்.
நாம் உணவை சரியாக மென்று சாப்பிடாமல் அவசரமாக உண்பதால் வாயில் உள்ள சுரப்பிகள் சுரந்து செரிமானத்திற்கு உதவ முடிவதில்லை.
உணவை வாயில் தேக்கி வைத்து நன்றாக மென்று சாப்பிட்டால் உமிழ்நீர் சுரப்பிகள் சுரந்து செரிமானத்திற்கு உதவும்.
உண்மையில் செரிமானம் என்பது வாயில் இருந்து தான் ஆரம்பிக்கிறது என்பதை புரிந்து கொண்டு நொறுங்கத் தின்றால் நுாறாண்டு வாழலாம்.