கொளுத்தும் வெயிலில் இருந்து கண்களை பாதுகாக்க !
ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து கண் இமைகளில் 15 நிமிடம் ஒத்தி எடுத்தால் கண்கள் புத்துணர்ச்சி பெறக்கூடும்.
தினமும் தூங்கும் முன், சிறிதளவு பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து கண்களைச் சுற்றி பூசி வர கருவளையம் நீங்கும்.
வெள்ளரிக்காய் ஜூஸில் காட்டன் துணியை 2 நிமிடம் நனைத்து இமைகளின் மீது 15 நிமிடங்கள் வைக்க, கண்கள் குளிர்ச்சியாகி ஓரிரு நாட்களில் கருவளையம் நீங்கும்.
கண்களில் வீக்கம் ஏற்படும்போது குளிர்ச்சியான டீ பேக்கை, மூடிய கண்களின் மீது வைத்தால் வீக்கம் குறையும்.
சிறிதளவு தக்காளி, மஞ்சள், எலுமிச்சை சாறு மற்றும் கிராம்புத்தூள் கலந்து இமைகளின் மீது சில நிமிடங்கள் பூசி, ஈரமான துணியால் துடைத்தால் கண் அழுக்கு நீங்கும்.
சிறிதளவு தேன், பாதாம் எண்ணெயை கலந்து கண்கள் மீது அப்ளை செய்து தூங்கி, காலையில் முகத்தை கழுவினால் கண்களில் ஏற்படும் வறட்சி குணமாகும்.
வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்களை உட்கொள்வது மிகவும் முக்கியம்.