டம்மி போட்டால் என்னென்ன பிரச்னை வரும் தெரியுமா?

இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேரும்போது இதயக் கோளாறுகள், ரத்தக் குழாய் அடைப்பு, சர்க்கரை கோளாறு உட்பட பல்வேறு உடல் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

பி.எம்.ஐ., என்பது எடையை கிலோவிலும், உயரத்தை மீட்டரிலும் கணக்கிட்டு வகுப்பது. ஆரோக்கியமான வரம்பு 18 - 24க்கு மேல் என்றால் அதிக எடை, 30க்கு மேல் உடல் பருமன், 35க்கு மேல் பி.எம்.ஐ., குறியீடு சென்றால் தீவிர ஆபத்து என்று பொருள்.

பெண்களுக்கு இடுப்பு சுற்றளவு இயல்பாக 80 செ.மீ.,க்கு குறைவாக இருக்க வேண்டும். 80 - 88 செ.மீ., இருந்தால் அதிக ஆபத்து, 88 செ.மீ.,க்கு மேல் இருந்தால் மிகத் தீவிர ஆபத்து என்று புரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய உடல் பருமன் என்று சொல்லப்படும் இடுப்பைச் சுற்றி எடை அதிகரித்தால், ஒட்டு மொத்த உடல் தோற்றமே மாறிவிடும்.

இதைத் தவிர்க்க, கொழுப்புச்சத்து நிறைந்த உணவை தவிர்த்து விட வேண்டும். பச்சை காய்கறிகள் உணவில் அதிகளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அடுத்தது, இடுப்பு, வயிற்றுப் பகுதிக்கு என்று இருக்கும் பிரத்யேக உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.

முழங்காலை மடிக்காமல் குனிந்து, முழங்காலை மடக்காமல், கை விரல்களால் இரு கால் கட்டை விரல்களையும் தொட வேண்டும். காலையில் எழுந்தவுடன் 20 முறை, இரவில் துாங்கச் செல்வதற்கு முன் 20 முறை செய்யலாம்

இடுப்பு சுற்றளவு 80 செ.மீ.,க்கு அதிகம் இருந்தால், குறிப்பிட்ட இடைவெளியில் டாக்டரின் ஆலோசனைப்படி, தேவையான பரிசோதனைகளை செய்ய வேண்டும்.