குழந்தைகளுக்கு மலச்சிக்கலை தவிர்க்க என்ன செய்யலாம்?
பால் வகை பொருட்கள், வறுத்த, பொரித்த உணவுகளை, குழந்தைகளுக்கு தருவதை தவிர்க்க வேண்டும்.
மலச்சிக்கல் பாதிப்பை தவிர்க்க அதிக நார்ச்சத்துள்ள, கீரை, காய்கறி, பழங்கள், தினமும் சாப்பிட வேண்டியது அவசியம்.
பிஸ்கெட், சாக்லெட் போன்ற அதிக சர்க்கரை, மைதா உள்ள உணவுகளுக்கு பதிலாக, நம் வழக்கத்திலுள்ள பாரம்பரிய உணவுகளை, சாப்பிட பழக்குவது நல்லது.
திரவ உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதற்கும், குழந்தையை பழக்க வேண்டும்.
பெற்றோரின் பங்கு மிகவும் முக்கியமானது. இரவில், அதிகபட்சம், 9:00 மணிக்குள் துாங்க வைத்து, அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை, குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
காலையில் எழுந்ததும், கழிப்பறைக்கு செல்லும் பழக்கத்தை கற்றுத்தர வேண்டியது அவசியம்.
குறிப்பாக, இந்திய அமைப்பிலுள்ள, 'டாய்லெட்'டை பயன்படுத்த, பழக்க வேண்டும்.
இதனால், குழந்தைக்கு, அடிவயிற்றில் நன்கு அழுத்தம் ஏற்பட்டு, மலம் எளிதாக கழிக்க வாய்ப்பு ஏற்படும்.