குழந்தைகளுக்கு வாக்கர் அவசியமா?
பொதுவாக 11ம் மாதத்தில் இருந்து குழந்தை நடக்கத் துவங்கும். ஆனால், 7 அல்லது 8ம் மாதத்திலேயே பெற்றோரோ அல்லது முக்கிய உறவினர்களோ குழந்தைக்கு வாக்கரை வாங்கித் தருகின்றனர்.
வாக்கரை பயன்படுத்தும் போது உட்காரும் பருவத்தில் இருந்து நேரடியாக நடக்கும் பருவத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. தவழும் பருவத்தில் உள்ள வளர்ச்சி நிலைகள் கிடைக்காமல் போகக்கூடும்.
துவக்கத்தில் நடக்க பழகுவதற்காக வாக்கரில் குழந்தைகளை பெற்றோர் உட்கார வைப்பர். ஆனால், நாளடைவில் வசதிக்காக மணிக்கணக்கில் வாக்கரிலேயே உட்கார வைப்பவர்களும் உள்ளனர்.
வாக்கரில் உள்ள துணியாலான ஷீட் நாளடைவில் 'கிரிப்' குறையும் போது குழந்தை ஒருபக்கமாக சரிந்தவாறு உட்காரக்கூடும்.
இதனால், நீண்டநேரம் வாக்கரில் உட்கார்ந்தவாறும், தவறான கோணத்திலும் இருக்கும் போது, முதுகெலும்பு பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளது.
அப்படி ஆசைக்கு வாக்கர் வாங்கினால், சிறிது நேரம் மட்டுமே உட்கார வைக்கலாம்; பாதுகாப்பாக குழந்தையின் அருகிலேயே இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால், பழங்கால முறைப்படி மரத்தினாலான நடைவண்டியை வாங்கித்தரலாம். நடைப்பயில இது பாதுகாப்பான ஒன்றாகும்.
நடைவண்டியில் ஒரு பக்கம் மட்டுமே பிடிப்பு இருக்கக்கூடும். தட்டுத்தடுமாறி தள்ளிக்கொண்டே நடந்து செல்லும் போது இடுப்பு, கால் தசைக்கு உரிய பயிற்சி கிடைத்து நடையை செம்மைப்படும்.