முதுமையில் மறதி நோய் பிரச்னையா? தீர்வுகள் சில!
குறிப்பிட்டு சொல்லக்கூடிய பிரச்னை எதுவும் இல்லாமலேயே முதுமையில் மறதி நோய் ஏற்படலாம்.
மூளையில் ஒவ்வொரு நரம்பு செல்லுக்கும் போதுமான ரத்த ஓட்டமும், அவற்றிற்கிடையே தொடர்பும் தேவை. வயதாகும் போது அமலாய்டு புரதம் மூளை செல்களில் சென்று தேங்கலாம்.
இதனால், செல்கள் சிதிலமடைந்து மறதி நோய் வரலாம். முதுமையில் வாதத்தின் தன்மை அதிகமாக இருக்கும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதனால் உடலில் எப்படி வறட்சி ஏற்படுகிறதோ, அது போல மூளை செல்களில், போதுமான சத்துக்கள் இல்லாமல், வாதம் சூழப்பட்டு வறட்சி ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க, உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
இளம் சூடான உணவில் நெய் சேர்த்து கொடுத்தால், மூளையின் செல்கள் புதுப்பிக்கப்படும்.
நார்ச்சத்துக்கள் நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்கள், புரதம் உள்ள பருப்பு வகைகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
யோகா, தியானம் செய்வது, புத்தகம் படிப்பதால், மூளையின் செரடோனின் சுரப்பு அதிகரிக்கும். இதனால் மறதி ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.
மொபைல் போன் அதிகம் உபயோகிக்கும் போது, டோபமைன் அதிகம் சுரந்து, மூளை சோர்வடையவும் வாய்ப்பு உள்ளது. எனவே அவற்றை குறைத்து கொள்ளலாம்.