வீட்டிற்குள் செருப்பு அணிவது பாதுகாப்பானதா?

தற்போது மாறி வரும் உணவுப் பழக்க வழக்கங்களால் குறைந்தப்பட்சமாக, நான்கில் ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பு உள்ளது. இவர்கள் தங்களது பாதங்களைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.

இவர்கள் வெறுங்காலில் நடக்கும் போது புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், எப்போதும் செருப்பு பயன்படுத்துவது அவசியம்.

வீட்டிற்குள் பயன்படுத்துவதற்கு என்று தனியாக செருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த செருப்பை வீட்டை விட்டு எங்கேயும் எடுத்துச் செல்லக் கூடாது.

அதேபோல், வீட்டிற்குள் கழிவறை இருந்தால் அதற்குத் தனியாகச் செருப்பைப் பயன்படுத்த வேண்டும். அவற்றையும் வீட்டுக்குள் போட்டுக் கொண்டு நடக்கக் கூடாது.

நாகரிகம் காரணமாக வீட்டின் தரையில் டைல்ஸ், மார்பிள்ஸ் போன்றவை இடம்பெற்றுள்ளதால், நடக்கும் போது தவறி விழ வாய்ப்புள்ளது. எனவே, வயதானவர்களும், சிறுவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

சிலருக்கு வீட்டிற்குள் தொடர்ச்சியாக நடக்கும் பழக்கம் இருப்பதால், அவர்களுக்குக் கால் மற்றும் பாத வலி ஏற்படும். செருப்பு அணிவதன் மூலம் இந்த தொந்தரவுகளைத் தடுக்கலாம்.