பல நன்மைகள் கொண்ட தயிரைக் குளிர்காலத்தில் சாப்பிடலாமா?
குளிர்ச்சி நிறைந்த தயிரை உட்கொள்வதால் சளி, இருமல் பிரச்னைகள் ஏற்படும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.
ஆனால், தயிர் அனைத்து பருவ காலங்களிலும் தயக்கமின்றி உட்கொள்வதற்கு ஏற்ற உணவுப் பொருளாகும்.
இரவில் தயிருடன் சிறிதளவு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது.
சிறிதளவு தயிரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தண்ணீரில் கழுவினால் போதும். முகத்துக்கு பொலிவு சேர்ப்பதுடன், குளிர்காலத்தில் சருமத்தை ஈரப்பதமாக வைக்கவும் உதவுகிறது.
ஒரு சிலர் குளிர்காலத்தில் மந்தமாகவோ, சோர்வாகவோ உணரலாம். அவர்கள் மாதுளை அல்லது ஸ்ட்ராபெர்ரி பழத்துடன் தயிர் கலந்து சாப்பிடுவது புத்துணர்வை அளிக்கும்.
குழந்தையின் உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களை சேர்க்க, தயிரை காய்கறிகளுடன் சேர்த்து சாலட்டாக செய்து தரலாம்.