காசநோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்?

'டியூபர்குளோசிஸ் பாக்டீரியா' நுண்கிருமிகளால், காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது.

தொடர்ந்து சளி இருப்பது, எடை குறைவு, காய்ச்சல், மார்பு வலி, இரவில் வியர்ப்பது, கால், கைகள் பலம் குன்றுதல் போன்றவை அறிகுறிகள்.

நோய் பாதிக்கப்பட்டவர் இருமுவதன் (சளி) மூலம், இந்நோய் மற்றவர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ளது.

இது, பொதுவாக நுரையீரலை பாதிக்கும். ஆனாலும், மூளை, சிறுநீரகம், முதுகெலும்பு ஆகிய உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கிறது.

காசநோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை எடுத்துக்கொண்டால் கட்டுப்படுத்தலாம்.

இந்த நோயால் பாதிக்கப்படும் நபர்கள், குறைந்தது 6 மாதங்கள் வரை மருந்துகள் உட்கொள்ள வேண்டும்.

காசநோய் வராமல் தடுக்க உடலில் எதிர்ப்பு சக்தியை குறையாமல் வைக்கக்கூடிய சிறந்த உணவுகளைச் சாப்பிடவேண்டும்.

மது, புகைத்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் விடுபடுதல். உடற்பயிற்சியின் மூலம் உடலை எப்போதும் துடிப்போடு வைத்துக் கொள்ளல் அவசியம்.