குளுட்டன் உணவுகளால் அலர்ஜி வருமா?

குளுட்டன் என்பது ஒரு வகை பசைத்தன்மை நிறைந்த புரதம். கோதுமை, பார்லி போன்ற தானிய வகைகளில் இவை அதிகம் காணப்படுகிறது.

சிலருக்கு குளுட்டன் உள்ள உணவுகளை உண்ணும் போது குடல் பாதிப்பு நோய் போன்ற அலர்ஜியை ஏற்படுத்தும். மேலும் சீலியக் நோய் என கூறப்படும் கடும் நோய் எதிர்ப்பு சக்தியின்மை குளுட்டனால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

சில சமயம் ஜீரண உறுப்புகள் பாதிப்பது, மூச்சு விடுவதில் சிரமம், நினைவின்மை போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.

சிலருக்கு உணவை உண்டவுடன் வயிற்று வலி, உப்பிசம், மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, சோர்வு, தலைவலி, வயிற்றுப் பிரட்டல் போன்றவை ஏற்பட்டால் அது தான் குளுட்டன் இருக்கும் அறிகறிகள்.

குளிட்டன் அலர்ஜி உள்ளவர்கள் பிஸ்கட், பிரட், பீட்சா, கேக், சாக்லேட், மால்ட் பானங்கள் போன்ற கோதுமை நிறைந்த உணவுகளை தவிர்க்கலாம்.

பீன்ஸ், சிறுதானியங்கள், நட்ஸ் வகைகள், ஓட்ஸ், அரிசி, சோளம், சோயா, உருளை, முட்டை, காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் போன்றவற்றில் குளுட்டன் இல்லை.