பொதுக் கழிப்பறையை பயன்படுத்த தயங்கும் பெண்களும்... ஆரோக்கிய குறைபாடும் !

தற்போது பொதுக் கழிப்பறைகள் பெண்கள் பயன்படுத்தும் வகையில் உள்ளதா என்பது அனைவரும் அறிந்ததே.

கழிப்பறைகளின் சுத்தமின்மை, குறைந்த எண்ணிக்கை, தனியுரிமை இல்லாமை போன்ற பல காரணங்களால் பெண்கள் பொது கழிப்பறைகளை பயன்படுத்த தயங்குகிறார்கள்.

இதனால் சிறுநீர் கழிப்பதை தாமதிப்பதோடு மட்டுமின்றி தண்ணீர் குடிக்கவும் தயங்குவதால், உடல்நலத்தில் பலவிதமான விளைவுகளை ஏற்படுகிறது.

குறிப்பாக சிறுநீர்ப்பை நிரம்பி மிகுந்த அழுத்தம் ஏற்படும். அருகிலுள்ள தசைகள், மூட்டுகள், எலும்புகள் மீது அழுத்தம் சேரும்.

சிறுநீர் தேங்கும் போது பெண்கள் சிலர் முன்னோக்கி குனிந்து தன்னியல்பாக உட்காருவது, முதுகுத்தண்டின் இயல்பை பாதிக்கிறது.

நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலையிலும் சிறுநீர் கழிப்பதை தள்ளிப் போடுவது பெல்விக் தசைகள் மீது எதிர்விளைவுகளை ஏற்படுத்துகிறது.

கீழ் கழுத்து, முதுகுத்தண்டு, இடுப்பு, முழங்காலில் வலி ஏற்படுகிறது.

55 % நகர்ப்புற பெண்கள் மட்டும் தான் பாதுகாப்பான, சுத்தமான பொது கழிப்பறையைப் பயன்படுத்த முடியும் என நேஷனல் சாம்பிள் சர்வே ஆபீஸ் 2023 தரவுகள் கூறுகின்றன.

தண்ணீர் அருந்துவதை 40 % பெண்கள் தவிர்ப்பதால், டிஹைட்ரேஷன், தசை தளர்ச்சி போன்றவற்றால் பாதிக்கப்படுவதாக டபிள்யூ.எச்.ஓ., மற்றும் யூனிசெப் - 2022 அறிக்கை கூறுகிறது.