வைட்டமின் டி சத்தால் புற்றுநோய், நீரிழிவு மற்றும் இதய பாதிப்புகளை தவிர்க்கலாம்!
சூரிய ஒளியில் வைட்டமின் டி கிடைப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் - பி (UVB) மூலம் நம் உடலே வைட்டமின் டி3 மற்றும் டி2-வை உற்பத்தி செய்யும்.
வைட்டமின் டி அளவு குறையும் போது ஆஸ்டியோபோரோசிஸ், புற்றுநோய், மனச்சோர்வு, தசை பலவீனம் உட்பட பல்வேறு பாதிப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது.
வைட்டமின் டி இருந்தால் தான் எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
புற்றுநோய் மற்றும் இதய பாதிப்புகளை குறைப்பது, டைப் 2 நீரிழிவு மற்றும் முடக்கு வாதம் ஆகியவற்றைத் தடுப்பது என இந்த வைட்டமின் டி உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கொழுப்பு நிறைந்த மீன்கள், பால், மஞ்சள் கரு, பாலாடைக்கட்டி, தானியங்கள், ஓட்ஸ், காளான் மற்றும் ஆரஞ்சு சாறு போன்ற பல்வேறு உணவுகளில் வைட்டமின் டி3 அதிகம் உள்ளது.
சூரிய ஒளி குறைவான இடங்களில் அதிக நேரம் வேலை செய்வது, அளவுக்கதிகமான சன்ஸ்க்ரீன் பயன்பாடு போன்றவற்றால் வைட்டமின் டி பற்றாக்குறை ஏற்படக்கூடும்.
எனவே, வைட்டமின் டி சத்துக்களை பெறும் வகையில் இயற்கையான சூரிய ஒளியில் நின்று அடிக்கடி சிறிது நேரம் செலவிடுங்கள்.
வாரத்துக்கு நான்கு நாட்களுக்காவது அரை மணி நேரம் வீதம் சூரிய ஒளி படுமாறு இருக்க வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும். எனவே, தினமும் காலை 7 முதல் 10 மணிக்குள் அரை மணி நேரம் ஒதுக்கலாம்.
டாக்டர்களின் பரிந்துரையின்றி வைட்டமின் டி அதிகளவு எடுத்துக்கொண்டால் சிறுநீரகம், இதயம், மற்றும் எலும்புகளில் பாதிப்பு ஏற்படலாம்.