பெட்ரோலியம் ஜெல்லி இருந்தால் சரும பராமரிப்பு செம ஈஸி…

சருமத்தை பாதுகாக்கவும், பராமரிக்கவும் பெட்ரோலியம் ஜெல்லியை பயன்படுத்தினால் நல்ல பலன்களை பெறலாம். அதன் பயன்கள் குறித்து மேலும் அறிந்து கொள்ளலாமா...

ஹேர்டையால் முகத்தில் காணப்படும் கருமை நிறத்தை போக்க சிறிதளவு பெட்ரோலியம் ஜெல்லியை முகத்தில் இலேசாக மசாஜ் செய்து முகத்தை கழுவினால் அவை மறையும்.

கண்களில் போட்ட மை, மேக் அப்பை நீக்க சிறிதளவு ஜெல்லியை பஞ்சில் தொட்டு கண்களை சுற்றி இதமாக தடவினால் அவை அனைத்தும் காணாமல் போகும்.

குளிர்காலங்களில் உதடு வெடிப்பிலிருந்து பாதுக்காக்க பயன்படுத்தாலம். மேலும் ஜெல்லியுடன் சிறிது சர்க்கரை சேர்த்து ஸ்க்ரப் செய்தால் உதடு பொலிவாக மாறும்.

கை கால் மூட்டுகள் கருமையாக இருப்பவர்கள் தினமும் ஜெல்லியை மூட்டுகளில் தடவி வர படிப்படியாக மறையும். மூட்டுகள் வறட்சியின்றி ஈரப்பதத்துடன் இருக்கும்.

புருவங்களை சரியான வடிவத்தில் மாற்ற சிறிது பெட்ரோலியம் ஜெல்லியை எடுத்து தினமும் தடவி வர உங்கள் பிடித்த மாதிரி அழகாக மாறிவிடும்.

வாரம் இருமுறை இரவு நேரங்களில் ஜெல்லி கொண்டு முகத்தில் மசாஜ் செய்தால் சரும சுருக்கங்கள், முகப்பருக்கள் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கப்படும்.

தினமும் இரவு தூங்கும் போது பாதத்தில் சிறிதளவு ஜெல்லியை எடுத்து பாதம் முழுக்க மசாஜ் செய்து ஒரு சாக்ஸ் அணிவதால் வெடிப்பு போகும். விரல் நகங்களும் வலுவாகும்.