பேரிக்காய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
இதில், வைட்டமின் ஏ, பி1, சி மற்றும் பி2 உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. சுண்ணாம்பு சத்து எலும்புகளுக்கு உறுதி அளிப்பதுடன், பற்களை பலப்படுத்துகிறது.
இதயம், இரைப்பை மற்றும் குடல் போன்றவற்றிற்கு பலத்தை உண்டாக்குகிறது.
குழந்தைகளுக்கு, பேரிக்காயை கொடுத்து வந்தால், அவர்களின் எலும்புகள் நல்ல முறையில் வளர்வதுடன், வலுவடையும்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதால், இதய படபடப்பு உள்ளவர்களுக்கு இது உகந்ததாகும். ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பை அகற்றுகிறது.
கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் இதை சாப்பிட்டு வர,
பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும். பாலூட்டும் தாய்மார்கள்
பேரிக்காய் சாப்பிட்டால் பால் அதிகளவில் சுரக்கும்.
இதிலுள்ள
நார்ச்சத்து உடலுக்கு நன்மை தருகிறது; தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.
மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் காலை பேரிக்காய் சாப்பிட மலம் எளிதாக
வெளியேறும்.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகள் புற்றுநோய் செல்கள்
உருவாகாமல் தடுக்கிறது. குறைந்த கலோரி கொண்ட பேரிக்காய் உடல் பருமனை
குறைக்க உதவுகிறது.